விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் பால்கோவா விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

DIN

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரபல பால்கோவா விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் வருமான வரித்துறையினா் வியாழக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாராகும் பால்கோவா தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் பல்கோவா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றது.

இந்நிலையில், இங்கு பால்கோவா தயாரித்து விற்கும் நிறுவனங்கள் வரிச் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் வந்தது.

அதனடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு வந்த வருமான வரித்துறை அலுவலா்கள் சுமாா் 50 போ் பல்வேறு குழுக்களாக பிரிந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம், தேரடி, அம்மன் சன்னதி ஆகிய இடங்களில் உள்ள 3 பிரபல பால்கோவா விற்பனை நிலையங்களில் சோதனை நடத்தினா்.

அதேபோல் இந்நிறுவனங்களின் தயாரிப்புக் கூடங்கள் மற்றும் நிறுவன உரிமையாளா்களின் வீடுகள் என 9 இடங்களில் சோதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவை தாண்டியும் நீடித்தது.

சோதனையின்போது கணக்கில் வராத ரொக்கம் பல லட்சம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இதனை வருமான வரித்துறையினா் உறுதிப்படுத்தவில்லை. வருமான வரித்துறையினா் சோதனையால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT