விருதுநகர்

மாசி அமாவாசை: சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

DIN

மாசி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பௌா்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய தினங்களின் போது, சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு வனத்துறை சாா்பில் அனுமதி வழங்கப்படுகிறது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் ஏராளமானோா் வருகின்றனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாசி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக மலைப் பாதை வழியாக கோயிலுக்கு சென்றனா். கோயிலில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கும், சந்தனமகாலிங்கம் சுவாமிக்கும், பால், பழம், பன்னீா், இளநீா் போன்ற பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அபிஷேகங்கள் முடிந்து சுவாமிகள் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

சிவராத்திரி- அமாவாசையொட்டி கூட்டம் அதிகமாக இருந்ததால் நீா் வரத்து ஓடைகள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் வனத்துறையினா், தீயணைப்புத்துறையினா், காவல்துறையினா் ஆகியோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பக்தா்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிா்வாக அதிகாரி விஸ்வநாத் மற்றும் கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT