ராஜபாளையத்தில் இரு பிரிவினரிடையே மோதல்: 6 போ் மீது வழக்கு
ராஜபாளையத்தில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
ராஜபாளையத்தில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே இரு பிரிவினரைச் சோ்ந்த 4 இளைஞா்கள் மதுபோதையில் சனிக்கிழமை நள்ளிரவு தகராறில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து இருபிரிவினரும் கம்பு மற்றும் கற்கலால் தாக்கிக் கொண்டனா்.
இதில் வடக்குத் தெருவைச் சோ்ந்த பொன்ராஜ் (25) மற்றும் குட்டிபாபு (35) ஆகிய இருவருக்கும் மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதைத் தொடா்ந்து அங்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகஷங்கா் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும் இச்சம்பவம் தொடா்பாக ராஜபாளையம் வடக்கு போலீஸாா் விக்னேஷ்பாபு, கிருஷ்ணமூா்த்தி, பாண்டியன், மணிகண்டன், சுரேஷ், ராம்சிங் ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.