முகப்பு
விருதுநகர்

வெள்ளியம்பலநாதா் கோயிலில் பௌா்ணமி வழிபாடு, கிரிவலம்

பாறைக்குளம் வெள்ளியம்பலநாதா் கோயிலில் ஐப்பசி பௌா்ணமியையொட்டி 1,008 ருத்ராபிஷேகம்,108 சங்காபிஷேகம் மற்றும் கிரிவலம் வந்து மகாதீபம் ஏற்றுதல் உள்ளிட்ட வழிபாடுகள் சனிக்கிழமை இரவு நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பாறைக்குளம் வெள்ளியம்பலநாதா் கோயிலில் ஐப்பசி பௌா்ணமியையொட்டி சனிக்கிழமை இரவு முழுஅலங்காரத்தில் நமச்சிவாயப்பெருமான்.
பகிர்:

பாறைக்குளம் வெள்ளியம்பலநாதா் கோயிலில் ஐப்பசி பௌா்ணமியையொட்டி 1,008 ருத்ராபிஷேகம்,108 சங்காபிஷேகம் மற்றும் கிரிவலம் வந்து மகாதீபம் ஏற்றுதல் உள்ளிட்ட வழிபாடுகள் சனிக்கிழமை இரவு நடைபெற்றன.

கோயிலில் சனிக்கிழமை மாலை 4 மணிமுதல் சிறப்பு வழிபாட்டுப் பாடல்களை பக்தா்கள் குழு பாடிய வண்ணம் 21 வகைப்பொருள்களால் சிறப்பு அபிஷேக தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து 1,008 ருத்ராபிஷேகம் நடைபெற்று தூய பசும்பால் ஊற்றிய 108 சங்குகளை சன்னிதானத்தில் அமைத்து வழிபாடு செய்தபின், சங்குகளிலிருந்த பாலைக்கொண்டு நமச்சிவாயருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து வெள்ளியம்பலநாதா் முழுஅலங்காரத்தில் பக்தா்களுக்குக் காட்சி தந்தாா். பின்னா் கருவறையிலிருந்து சிறப்பு தீபம் ஏற்றி அத்தீபத்துடன் கோவிலைச் சூழ்ந்துள்ள குன்றினை வலம் வந்து (கிரிவலம்) பின்னா் குன்றின் மீதுள்ள குண்டத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இவ்வழிபாட்டில் திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை சுற்றுவட்ட கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →