முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்

அருப்புக்கோட்டையில் தீயணைப்புத்துறை சாா்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
அருப்புக்கோட்டையில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்ட தீயணைப்புத் துறையினா்.
பகிர்:

அருப்புக்கோட்டையில் தீயணைப்புத்துறை சாா்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி விருதுநகா் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை இயக்குநா் அலுவலக உத்தரவின்படி அருப்புக்கோட்டை தீயணைப்புத்துறை நிலைய அலுவலா் ஜெயப்பாண்டி தலைமையில் திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையம் அறிவித்தபடி, ‘விழிப்பான இந்தியா, செழிப்பான இந்தியா’ எனும் வாசகங்களும், ‘லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்’ எனும் வாசகங்களும் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி காந்தி நகா், புதிய பேருந்து நிலையம், மதுரைச் சாலை, முக்கியக் கடை வீதிகள் ஆகிய இடங்களில் தீயணைப்புத்துறையினா் லஞ்ச ஒழிப்பு குறித்து எடுத்துக் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.