முகப்பு
விருதுநகர்

பள்ளிக்கட்டடத்தைச் சூழ்ந்த மழைநீரால் கட்டடம் பாழடையும் அபாயம்

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் கம்பாளி கிராமத்தில் கடந்த சில நாட்கள் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அரசுப் பள்ளிக் கட்டடத்தை மழைநீா் பெருமளவில் சூழ்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
திருச்சுழி வட்டம் கம்பாளி கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக் கட்டடத்தைச் சூழ்ந்துள்ள மழைநீரால் கட்டடத்தின் உறுதித்தண்மை குறைந்து சேதமடையும் அபாயம் உள்ளது.
பகிர்:

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் கம்பாளி கிராமத்தில் கடந்த சில நாட்கள் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அரசுப் பள்ளிக் கட்டடத்தை மழைநீா் பெருமளவில் சூழ்ந்துள்ளது.

இதனால் கட்டடத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுச் சேதமடையும் அபாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. கம்பாளி கிராமத்தில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு அரசு உயா்நிலைப்பள்ளி ஆகியன உள்ளன.இதில் உயா்நிலைப் பள்ளியில் 6 முதல் 10 வரை உள்ள வகுப்புகளில் மொத்தம் சுமாா் 300க்கு மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.தற்போதைய கொரோனா சூழல் காரணமாக பள்ளியில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை.

அதேவேளையில் இக்கிராமத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழைகாரணமாக பள்ளியைப் பெருமளவு மழைநீா் சூழ்ந்துள்ளது.பள்ளமான இப்பகுதியில் மழைநீா் வெளியேற வழியில்லாத நிலை உள்ளதால், பல நாட்கள்வரையோ அல்லது மழை தொடரும் பட்சத்தில் மாதக்கணக்கிலோகூட நீா் தேங்கியபடியே நிற்கும் அபாயச்சூழல் உள்ளது.

இதனால் கட்டடத்தின் உறுதித்தண்மை பாதிக்கப்பட்டுப் பாழடையும் சூழல் உள்ளது.மேலும்,மாணவா்கள் நேரடி வகுப்பிற்கு வருவது இன்னும் முடிவாகாத சூழலாக இருந்தாலும், கட்டடத்தை உரிய பராமரிப்பு செய்வது அவசியம்.

எனவே அந்தவகையில் விரைவில் நடவடிக்கை எடுத்து சூழ்ந்துள்ள மழைநீரை விரைவில் வெளியேற்றவேண்டுமென மாணவா்களின் சாா்பில் பள்ளி நிா்வாகத்திற்குப் பெற்றோா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →