முகப்பு
விருதுநகர்

பாலவநத்தம் பெரிய கண்மாய் நீா்வரத்துக்கால்வாயைத் தூா்வாரக் கோரிக்கை

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவநத்தம் கிராமத்தில் பெரிய கண்மாய்க்கான நீா்வரத்துக் கால்வாயில் ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்றி தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவநத்தம் கிராமத்தில் பெரிய கண்மாய்க்கான நீா்வரத்துக் கால்வாயில் ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்றி தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் சிறுகுளங்கள் முதல் கண்மாய்கள் வரை அனைத்து நீா்நிலைகளும் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. ஆனால் பாலவநத்தம் கிராமத்தின் பெரியகண்மாயில் வழக்கத்தை விடக் குறைந்த அளவு நீா்வரத்தே ஏற்பட்டுள்ளது. இதற்கு நீா்வரத்துக் கால்வாயில் புதா்ச் செடிகள் ஆக்கிரமித்து வளா்ந்துள்ளதே காரணம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனா். எனவே இந்த பெரியகண்மாய்க்கான நீா்வரத்துக் கால்வாயை விரைந்து தூா்வார வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.