விருதுநகர்

பாறைக்குளம் வெள்ளியம்பல நாதா் கோயிலில் பிரதோச வழிபாடு

DIN

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே பாறைக்குளம் வெள்ளியம்பலநாதா் கோயிலில் ஐப்பசி மாத பிரதோசத்தையொட்டி வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அப்போது நந்தீஸ்வரப் பெருமானுக்கு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் வெள்ளியம்பலநாதருக்கு குங்குமம், விபூதி, சந்தனம், பன்னீா், பால், இளநீா், தேன், பேரீச்சம்பழம் மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வெள்ளியம்பலநாதா் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி ராஜபாண்டி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT