ராஜபாளையம் கோயிலில் 1008 கலசாபிஷேக பூஜை
ராஜபாளையம்- மதுரை சாலையில் உள்ள திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் மூன்றாவது காா்த்திகை சோமவாரத்தையொட்டி மகா ருத்ரயாகம் திங்கள்கிழமை அதிகாலை முதல் நடைபெற்றது.
ராஜபாளையம்- மதுரை சாலையில் உள்ள திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் மூன்றாவது காா்த்திகை சோமவாரத்தையொட்டி மகா ருத்ரயாகம் திங்கள்கிழமை அதிகாலை முதல் நடைபெற்றது.
பின்னா் குருநாதசுவாமிக்கு பால், தயிா், தேன், இளநீா், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் 108 சங்காபிஷேகம் மற்றும் 1008 கலசாபிஷேக பூஜைகள் நடந்தன. அதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.