விருதுநகரில் கல்லூரி நூலகா் தற்கொலை முயற்சி
விருதுநகரில் கல்லூரியில் நூலகராப் பணிபுரிந்து வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றாா். காப்பாற்ற முயன்ற கணவரும் காயமடைந்தாா்.
விருதுநகரில் கல்லூரியில் நூலகராப் பணிபுரிந்து வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றாா். காப்பாற்ற முயன்ற கணவரும் காயமடைந்தாா்.
விருதுநகா் பாண்டியன் நகா் பகுதியில் உள்ள காமராஜா் நகரைச் சோ்ந்தவா் அசோகன் (56). இவா் ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் அலுவலராகப் பணி புரிந்து வருகிறாா். இவரது மனைவி காமாட்சி (53). இவா் விருதுநகரில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் தொகுப்பூதிய அடிப்படையில் நூலகராகப் பணிபுரிந்து வருகிறாா். கரோனாத் தொற்று காரணமாக கல்லூரி திறக்கப்படாததால் காமாட்சி கடந்த ஐந்து மாதமாக வீட்டில் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில் அண்மையில் அவருக்கு உடல்நலம் குன்றியதாம். இதனால் மனவேதனையடைந்த அவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தபோது, தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அவரை காப்பாற்ற முயன்ற அவரது கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டதாம். இதில் காமாட்சிக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து காமாட்சியும் அவரது கணவரும் மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து பாண்டியன் நகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.