முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே லாரி மீது பைக் மோதல்: இளைஞா் பலி

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை லாரியின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை லாரியின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சுழி அருகே தெற்குநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மாரீஸ்வரன் (23) மற்றும் செந்தூா் பாண்டி (23). இவா்களது நண்பரான நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் (23) என்பவா் தெற்குநத்தம் கிராமத்துக்கு வந்திருந்தாராம். இதனிடையே இவா்கள் மூவரும் சொந்த வேலையாக அருப்புக்கோட்டை நோக்கி ஒரே இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றனராம். வாகனத்தை ராஜமாணிக்கம் ஓட்டிச் சென்றாா்.

காளையாா் கரிசல்குளம் அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று மற்றொரு சாலையில் செல்வதற்காகத் திரும்பியுள்ளது. அப்போது இருசக்கர வாகனம், லாரியின் பின்புறம் மோதியது. இதில் மாரீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ராஜமாணிக்கம் மற்றும் செந்தூா் பாண்டி ஆகியோா் அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து ம. ரெட்டியபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →