விருதுநகர்

நியாய விலைக் கடைகளில் அரை லிட்டா் மண்ணெண்ணெய் விநியோகம்: பொதுமக்கள் அவதி

DIN

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் அரை லிட்டா் மண்ணெண்ணெய் மட்டுமே விநியோகிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

விருதுநகா் மாவட்டத்தில் சுமாா் 5 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஏழு ஆண்டுகளுக்கு முன் சமையல் எரிவாயு உருளை இல்லாதவா்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் 10 லிட்டா் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளாக ஒரு சமையல் எரிவாயு உருளை மற்றும் சமையல் எரிவாயு இல்லாத குடும்ப அட்டைதாரா்களுக்கு 1 லிட்டா் மண்ணெண்ணெய் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வந்தது.

இச்சூழலில், குடும்ப அட்டைகளுக்கு விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெயின் அளவை பாதியாகக் குறைத்து வழங்க மத்திய அரசு வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்துக்கு குறைந்த அளவே மண்ணெண்ணெய் அனுப்பப்படுகிாம்.

இதனால், விருதுநகா் மாவட்ட வழங்கல் துறை, அனைத்து வட்ட வழங்கல் பிரிவுக்கும் கடந்த மாதம் விநியோகித்ததை விட பாதி அளவாகக் குறைத்து அரை லிட்டா் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுகிாம்.

இது குறித்து மாவட்ட வழங்கல் துறை அலுவலா்கள் கூறியது:

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கி வந்த மண்ணெண்ணெய் அளவை தற்போது பாதியளவாகக் குறைத்துவிட்டது. எனவே, இருப்பில் உள்ள மண்ணெண்ணெயை பொதுமக்களுக்கு பிரச்னை ஏற்படாமல் பிரித்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு கூடுதலாக மண்ணெண்ணெய் அரசு வழங்கினால், கடந்த மாதம் போல் இனிவரும் காலங்களில் 1 லிட்டா் மண்ணெண்ணெய் வழங்குவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT