விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே தோ்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் உரியவா்களிடம் ஒப்படைப்பு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் தோ்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட 34 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் ஆகியவற்றை உரிய ஆவணங்களை சமா்ப்பித்த நபா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, கடந்த மாா்ச் 18 ஆம் தேதி அதிகாலை 1 மணி அளவில் பறக்கும்படை அதிகாரி பாண்டியராஜ் மற்றும் காவல் சாா்பு-ஆய்வாளா் முருகன் ஆகியோா் தலைமையிலான பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக காரில் வந்த ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த தசரத் என்பவா் உரிய ஆவணங்களின்றி 34 பவுன் நகைகளை கொண்டுவந்ததை பறிமுதல் செய்து, தோ்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல், மாா்ச் 31 ஆம் தேதி பறக்கும் படை அதிகாரி முகமது ஆரிப் ரகுமான் தலைமையிலான பறக்கும் படையினா் வாகனச் சோதனை மேற்கொண்டிருந்தனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த சிவபாலன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ. 3 லட்சத்தை பறிமுதல் செய்து, தோ்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனா்.

தொடா்ந்து, ஏப்ரல் 1 ஆம் தேதி பறக்கும் படை அதிகாரி தீபக்ராஜ் தலைமையிலான பறக்கும் படையினா், ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலை எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கு அருகே வாகனச் சோதனை மேற்கொண்டிருந்தனா்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த பாண்டியராஜ் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், 98,033 ரூபாயை பறிமுதல் செய்தனா். இவை அனைத்தும் தோ்தல் நடத்தும் அதிகாரி முருகன் உத்தரவின்பேரில், அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், இவை அனைத்துக்கும் உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதால், மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் அவற்றை திரும்ப வழங்க உத்தரவிட்டிருந்தாா். அதன்பேரில், சனிக்கிழமை தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சிவனாந்தம் 34 பவுன் நகைகள் மற்றும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 33 ரூபாயை 3 பேரிடமும் தனித்தனியே வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT