விருதுநகர்

அருப்புக்கோட்டையில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நெசவாளா்களுக்கான கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளா் அசோக்குமாரின் உத்தரவுப்படி, நகரில் வாா்டுவாரியாக கரோனா தடுப்பூசி முகாம்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி சுகாதாரத் துறை சாா்பில் திருநகரம் தனியாா் திருமண மண்டபத்தில் நெசவாளா்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளா் அய்யப்பன் முன்னிலையில், மருத்துவா்கள், மருத்துவப்பணியாளா்கள் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இம்முகாமில் மொத்தம் 267 நெசவாளா்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT