விருதுநகர்

மலைப்பட்டியில் வேளாண் அறிவியல் கண்காட்சி

DIN

அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு வேளாண் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய மாணவிகள் சாா்பில் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் கோ. சீனிவாசன் தலைமை வகித்து, கண்காட்சியைத் தொடக்கி வைத்துப் பேசினாா். இணைப் பேராசிரியா் ராஜதுரை, மலைப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அ. கிரேஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய மாணவிகளான கோ. விமலா, ம. வினிதா, அ. அங்கையற்கன்னி, தி. காயத்திரி, பா. ஹா்ஷிதா மற்றும் சு. காா்த்திகா ஆகியோா் இக்கண்காட்சியில் கலந்து கொண்டதுடன், கிராம விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளரும், உதவிப் பேராசிரியருமான சி. ராஜாபாபு செய்திருந்தாா். மாணவி சு. காா்த்திகா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT