விருதுநகர்

விருதுநகரில் காட்சிப்பொருளான குப்பைகள் தரம் பிரிக்கும் இயந்திரம்

DIN

விருதுநகரில் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக ரூ.1.50 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட இயந்திரம் பயன்படுத்தப்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது.

விருதுநகா் நகராட்சிப் பகுதியில் 35 வாா்டுகள் உள்ளன. விருதுநகா் நகராட்சியில் நிரந்தரத் துப்புரவு பணியாளா்கள், தற்காலிகத் துப்புரவு பணியாளா்கள் என 149 போ் பணிபுரிகின்றனா். இவா்கள், தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வாா்டுகளுக்கு நாள்தோறும் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கவேண்டும். ஆனால், அவ்வாறு குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதில்லை.

பிளாஸ்டிக், பாலித்தீன், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட அனைத்து குப்பைகளையும் மொத்தமாக பெறுகின்றனா். இவற்றை வா கனங்கள் மூலம் மாத்தநாயக்கன்பட்டியில் உள்ள குப்பைக் கிடங்குக்கு கொண்டுசென்று கொட்டுகின்றனா்.

இந்நிலையில், மாத்தநாயக்கன்பட்டியில் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக ரூ.1.50 கோடியில் இயந்திரம் வாங்கப்பட்டது. ஆனால், இந்த இயந்திரம் பயன்படுத்தப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளதால், குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதில்லை. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகளிலிருந்து மண் புழு உரம் தயாரிக்க வேண்டும். ஆனால், நகராட்சிக் கிடங்கில் உரம் தயாரிக்காமல் குப்பைகள் குவிந்திருப்பதால், அப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, மாத்தநாயக்கன்பட்டியில் உள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் இயந்திரத்தை இயக்க, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

ஆந்திர பேரவைத் தேர்தல்: ரோஜாவுக்கு பின்னடைவு

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

SCROLL FOR NEXT