முகப்பு
விருதுநகர்

பள்ளிமடம் ஆசிரமத்தில் பகவான் ரமண மகரிஷியின் 142-வது ஜெயந்தி விழா

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பள்ளிமடம் கிராமத்திலுள்ள ஆசிரமத்தில் பகவான் ரமண மகரிஷிகளின் 142 ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:49 AM
திருச்சுழி அருகே பள்ளிமடம் கிராமத்திலுள்ள பகவான் ரமண மகரிஷி ஆசிரமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின்போது அருள்பாலித்த பகவான் ரமணர்.
பகிர்:

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பள்ளிமடம் கிராமத்திலுள்ள ஆசிரமத்தில் பகவான் ரமண மகரிஷிகளின் 142 ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

 திருச்சுழியில் பிறந்தவர் பகவான் ரமணண மகரிஷி ஆவார்.திருச்சுழி அருகே பள்ளிமடம் கிராமத்தில் மகரிஷிக்கு தனி ஆசிரமம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

இங்கு நாள்தோறும் ஏழைகளுக்கு அன்னதானமும், மகரிஷிக்கு 4 கால வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் அவரது 142 ஆவது பிறந்தநாளான டிசம்பர் 30ம் தேதி வியாழக்கிழமை அந்த ஆசிரமத்தில் பகவான் ரமண மகரிஷிகளின் பளிங்கு உருவச்சிலை முன்பாக சிறப்பு யாகவேள்விகளும், அபிஷேகங்கள் மற்றும் தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன.

வழிபாட்டையடுத்து, பகவன் ரமண மகரிஷி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்வழிபாட்டில் சுமார் 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.