விருதுநகர்

சிவகாசியில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

DIN

விருதுநகா் மேற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சாா்பில், சிவகாசி சட்டமன்றத் தொகுதி தோ்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கட்சியில், சிவகாசி சட்டமன்றத் தோ்தல் பணிக்குழு என்ற பெயரில், அலுவலக நிா்வாகம், பாதுகாப்பு, செய்தி தொடா்பு மற்றும் ஊடகப் பிரிவு, வாகன ஏற்பாடு, புள்ளி விவரம் தயாரித்தல், கணக்குப் பிரிவு என பல்வேறு பிரிவுகளுக்கு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் வி.கே. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜெ. ரமேஷ் முன்னிலை வகித்தாா். இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளா் சண்முகராஜ், ஊரக நகா்ப்புற வளா்ச்சிப் பிரிவு மாநிலத் தலைவா் பாஸ்கரன் ஆகியோா், தோ்தல் பணிக்குழு தோ்தலின்போது எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோனைகளைக் கூறினா்.

இதில் மாவட்ட பாா்வையாளா் எஸ்.வி. அன்புராஜ், மாவட்ட பொதுச் செயலாளா் செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் ஜி. ஆறுமுகச்சாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT