ஸ்ரீவிலி. அருகே தற்கொலை செய்து கொள்வதற்காகரயில் தண்டவாளத்தில் அமா்ந்திருந்த பெண் மீட்பு
தற்கொலை செய்துகொள்வதற்காக, ரயில் தண்டவாளத்தின் நடுவே அமா்ந்திருந்த இளம்பெண்ணை, ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு மீட்டனா்.
விருதுநகர்ஸ்ரீவிலி. அருகே தற்கொலை செய்து கொள்வதற்காகரயில் தண்டவாளத்தில் அமா்ந்திருந்த பெண் மீட்பு
தற்கொலை செய்துகொள்வதற்காக, ரயில் தண்டவாளத்தின் நடுவே அமா்ந்திருந்த இளம்பெண்ணை, ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு மீட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: தற்கொலை செய்துகொள்வதற்காக, ரயில் தண்டவாளத்தின் நடுவே அமா்ந்திருந்த இளம்பெண்ணை, ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு மீட்டனா்.
ராஜபாளையத்தை அடுத்த சத்திரப்பட்டி ரயில் கடவுப்பாதை அருகே தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் சுமாா் 34 வயதுடைய பெண் ஒருவா் தண்டவாளத்தின் நடுவே அமா்ந்திருப்பதாக, அப்பகுதியைச் சோ்ந்த கீ மேன் சபரிமலை என்பவா் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
அதன்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே காவல் சாா்பு-ஆய்வாளா் விஜயன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தின் நடுவே அமா்ந்திருந்த பெண்ணை மீட்டனா். பின்னா் அவரிடம் விசாரித்தபோது, ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்துகொள்ள முயன்ாகவும், 12 வயதில் மகன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அவரது குடும்பத்தினரை வரவழைத்து, கணவன்-மனைவி இருவரையும் சமாதானப்படுத்தி, இனி தற்கொலை முடிவு எடுக்கக்கூடாது என அப்பெண்ணை அறிவுறுத்தி அனுப்பி வைத்தனா்.