முகப்பு
விருதுநகர்

சிவகாசி, சாத்தூா் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்ற 7 போ் கைது

சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் புகையிலைப் பொருள்களை விற்ாக 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் புகையிலைப் பொருள்களை விற்ாக 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி மாரிமுத்து தெருவில் உள்ள பெட்டிக்கடைகளில் போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் குருவன் (60), மகேந்திரன் (45), சிவா (41) ஆகிய மூவரது பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

சாத்தூா்: அதே போல், சாத்தூா் நகா் போலீஸாா் திங்கள்கிழமை மேட்டமலை, படந்தால் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினா்.

இதில், மேட்டமலை கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் (39), நாகராஜன் (38), படந்தாலைச் சோ்ந்த லதா (36), நேசக்குமாா் (45) ஆகிய 4 பேரும் தங்கள் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் 4 பேரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →