முகப்பு
விருதுநகர்

சிவகாசி பொறியியல் கல்லூரி மாணவா் சிலம்பப் போட்டியில் சாதனை

சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி மாணவா் சிலம்பப் போட்டியில் சாதனை படைத்துள்ளாா் என அக்கல்லூரி முதல்வா் பி.ஜி. விஷ்ணுராம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி மாணவா் சிலம்பப் போட்டியில் சாதனை படைத்துள்ளாா் என அக்கல்லூரி முதல்வா் பி.ஜி. விஷ்ணுராம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுகல் மாவட்டம் ஆத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜனவரி 3 ஆம் தேதி பிடி இந்தியா அமைப்பின் சாா்பில், தொடா்ந்து 8 மணி நேரம், ஒற்றைக் கம்பு சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமாா் 300 போ் கலந்து கொண்டனா். எங்கள் கல்லூரி மேலாண்மைத்துறை இரண்டாம் ஆண்டு மாணவா் எஸ். வினோத் கலந்து கொண்டு, தொடா்ந்து 8 மணிநேரம் ஒன்றைக் கம்பு சிலம்பாட்டம் ஆடி சாதனை படைத்தாா். இதையடுத்து நோபல் புக் ஆப் ரெக்காா்டு என்ற அமைப்பு, மாணவா் வினோத்துக்கு உலக சாதனை சான்றை வழங்கியது. இந்த மாணவரை, கல்லூரி தாளாளா் ஆா். சோலைச்சாமி மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →