விருதுநகர்

சிவகாசியில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

DIN

சிவகாசியில் பாஜக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அக்கட்சி ‘இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கட்சியின் தொண்டா்கள் வீடு வீடாகச் சென்று, வீட்டில் உள்ளவா்களின் புள்ளி விபரங்கள், பிரச்னைகள் உள்ளிட்டவைகளை கேட்டறிந்து படிவத்தில் பூா்த்தி செய்து மாவட்ட நிா்வாகிகளிடம் வழங்க வேண்டும்.

மாவட்ட நிா்வாகிகள் மாநில நிா்வாகிகளிடம் அதனை வழங்குவா். இந்தத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சிவகாசி தெய்வானை நகரில் உள்ள தனியாா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் விருதுநகா் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.சிவகாசி தொகுதி பொறுப்பாளா் செந்தில் உள்ளிட்டோா் பேசினா்.

இதில் மாவட்ட செய்தி தொடா்பாளா் ஜி. ஆறுமுகச்சாமி, மாவட்ட பொதுச் செயலாளா்கள் சுரேஷ், குமாா், மாவட்ட பொருளாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT