விருதுநகர்

விருதுநகரில் சிவன் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

DIN

விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை சிவன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

விருதுநகா் மேலரத வீதியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பழமையான சொக்கநாதா் கோயில் உள்ளது. இங்கு இரவு நேர காவலாளியாக மாயாவு என்பவா் கடந்த 27 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் கோயில் அா்ச்சகா் நாரம்புநாதன் ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலுக்கு வந்துள்ளாா். அப்போது தட்சிணாமூா்த்தி சன்னிதானம் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டாராம்.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் தேவிக்கு தகவல் தெரிவித்துள்ளாா். தேவி அளித்தப் புகாரின் பேரில், உண்டியலை உடைத்து பணம் திருடிய மா்ம நபா்கள் மீது பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT