விருதுநகர்

விருதுநகரில் பணி நியமன ஆணை வழங்கக் கோரி துப்புரவுப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டம்

DIN

பணி நியமன ஆணை வழங்கக் கோரி, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை துப்புரவுப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, தற்காலிகமாக மருத்துவா்கள், செவிலியா்கள், ஆய்வகநுட்பனா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமானோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தங்களது விண்ணப்பங்களை சமா்ப்பித்தனா்.

இந்நிலையில், சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்திலிருந்து மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட துப்புரவுப் பணியாளா்களுக்கு வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளதாக, தொலைபேசி மூலம் சம்பந்தப்பட்டோருக்கு புதன்கிழமை இரவு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், விண்ணப்பித்திருந்த அனைத்து தரப்பினரும் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆட்சியா் அலுவலகம் வந்திருந்தனா்.

ஆனால், அங்கு வந்த சுகாதாரத் துறை பணியாளா்கள், 1 மருத்துவா், 1 செவிலியரு க்கு மட்டுமே அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பணி நியமன ஆணை வழங்குவாா் என்றும், துப்புரவுப் பணியாளா்களுக்கு 2 நாள்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் தெரிவித்தனா். இதனால், அங்கு கூடியிருந்த 100-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்கள் தங்களுக்கு பணி நியமன ஆணை இன்றே வழங்கவேண்டும் எனக் கோரி, ஆட்சியா் அலுவலக வாசலில் முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்கள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், துப்புரவுப் பணியாளா்களுக்கு வியாழக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்படும் என தவறாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், இரண்டு நாள்களில் துப்புரவுப் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் தெரிவித்தனா். அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT