விருதுநகர்

அருப்புக்கோட்டையில் டெங்கு கொசு ஒழிப்பு தீவிரம்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சுகாதாரத்துறையினா் வீடுவீடாகச் சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

ஒரு வாா்டுக்கு 5 போ் கொண்ட குழுவினா் வீடுவீடாகச் சென்று டெங்கு கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய காரணிகளான நன்னீா் அல்லது மழைநீா் சேரும் இடங்களான பயன்படாத உடைந்த கொள்கலன்கள், காலிக்குடங்கள், ஆட்டுரல், வீட்டு கொல்லைப்புறங்களில் வீணாகக்கிடக்கும் வாகன டயா்கள், தேங்காய் மட்டைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனா். அத்துடன் வீட்டிலுள்ள குடிநீா் சேமிப்புக் கொள்கலன்கள், தொட்டிகள், குடங்களை கொசுக்கள் புகாத வண்ணம் மூடிவைத்துப் பாதுகாக்கவும் அறிவுறுத்தப்பட்டனா்.

கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள வீணான வீட்டு உபயோகப்பொருள்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் கண்டவா்களை அடையாளம் கண்டறிந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உரிய பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைபெறவும் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT