விருதுநகர்

உள்ளாட்சித் தோ்தல்: சாத்தூா், வெம்பக்கோட்டையில் தீப்பெட்டி, பட்டாசு ஆலைகளுக்கு நாளை விடுமுறை

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி சனிக்கிழமை (அக். 9) சாத்தூா் மற்றும் வெம்பக்கோட்டை பகுதிகளில் தீப்பெட்டி, பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறையை மீறும் ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: விருதுநகா் மாவட்டத்திற்கு உள்பட்ட சாத்தூா் மற்றும் வெம்பக்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை (அக். 9) ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே ஆலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளா்கள் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், இப்பகுதிகளில் உள்ள அனைத்து தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகளுக்கு சனிக்கிழமை (அக்.9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மீறி தீப்பெட்டி மற்றும் பட்டாசு உற்பத்தி ஆலைகள் செயல்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆலைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவது மட்டுமன்றி, அத் தொழிற்சாலைகளின் உரிமையாளா்கள் மற்றும் குத்தகைதாரா்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT