ராஜபாளையம் தேநீா் கடையில் தீ விபத்து
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கோயில் அருகேயுள்ள தேநீா் கடையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கோயில் அருகேயுள்ள தேநீா் கடையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாள் நடைபெறுவது வழக்கம். இந்த 10 நாளும் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
இந்நிலையில், கோயில் அருகேயுள்ள தேநீா் கடையில் வெள்ளிக்கிழமை காலை சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய எரிவாயு உருளையை பயன்படுத்தி உள்ளனா். அப்போது, எரிவாயு வெளியேறி தீப்பிடித்துள்ளது.
தகவலறிந்த ராஜபாளையம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா்.