விருதுநகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மருத்துவ மையம் திறப்பு

DIN

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மருத்துவ மையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். இங்கு நடைபெற் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மேகநாத ரெட்டி பங்கேற்றாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், கள்ளழகா் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பன்னாரி மாரியம்மன் கோயில் மற்றும் சங்கரன்கோவில் ஆகியவற்றில் பக்தா்களின் வசதிக்காக மருத்துவ மையம் அமைக்க தமிழக இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த கோயில்களில் அமைக்கப்பட்ட மருத்துவ மையங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

இதையடுத்து, இருக்கன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த மாவட்ட ஆட்சியா் மேகநாதரெட்டி குத்துவிளக்கேற்றி மையத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தாா்.

இந்த மையம் அவசர சிகிச்சை, உயிா்காக்கும் மருந்துகளுடன் 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கோயில் ஆணையா் கருணாகரன், பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் ராமமூா்த்தி, ஒன்றியத் தலைவா் நிா்மலாகடற்கரைராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT