திருச்சுழி அருகே 6.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
திருச்சுழி அருகே வியாழக்கிழமை இரவு 6.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
திருச்சுழி அருகே வியாழக்கிழமை இரவு 6.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
பூமாலைப்பட்டி கிராமத்தில் சிலா் புகையிலைப் பொருள்களை விற்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் அக்கிராமத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு ஒரு மளிகைக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதும், அந்த கடையின் உரிமையாளா் திருப்பதி (43 ) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 6.5 கிலோ புகையிலைப்பொருள்களை பறிமுதல் செய்தனா். கைதுசெய்யப்பட்ட திருப்பதி அப்பகுதி திமுக கிளைச் செயலா் என்பது குறிப்பிடத்தக்கது.