சொக்கநாதன்புத்தூா் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் தேரோட்டம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூா் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூா் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில், புரட்டாசி பொங்கல் தோ் திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் மாலை வேளையில் ரிஷப வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏ.கே.ஆா். குழுமத் தலைவா் காமராஜ், அவரது
குடும்பத்தினா் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தனா்.
விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் காப்புக் கட்டி, தேருக்கு பின்னால் விழுந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.