தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை
ராஜபாளையத்தில் துப்புரவுப் பணியாளா்களுக்கு புத்தாடைகளை சட்டப் பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
ராஜபாளையத்தில் துப்புரவுப் பணியாளா்களுக்கு புத்தாடைகளை சட்டப் பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தீபாவளியையொட்டி நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ராஜபாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் பங்கேற்று தனது சொந்த பணத்திலிருந்து 1,243 தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகளையும், இனிப்புகளையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ராஜபாளையம் நகா்மன்றத் தலைவா் பவித்ரா ஷியாம், துணைத் தலைவா் கல்பனா குழந்தைவேலு, நகரச் செயலா் ராமமூா்த்தி உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.