விருதுநகர்

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றிய பொதுமக்கள்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி 33-ஆவது வாா்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை கருப்பு கொடி ஏற்றினா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி 33-ஆவது வாா்டுக்குள்பட்ட கிருஷ்ணா நகா் பகுதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் குடிநீா், வாருகால், தெருவிளக்கு வசதி இல்லை என்று, தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியா், நகராட்சி அலுவலகம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு வெளியே கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் காவல் ஆய்வாளா், நகா் மன்ற உறுப்பினா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மூன்று மாதத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடா்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

மரகத பச்சையும் மல்லிப்பூவும்! ஸ்ருஷ்டி டாங்கே..

இந்தியன் - 2 முதல் பாடல் புரோமோ!

தில்லியில் சுட்டெரிக்கும் வெயில்: ’வெளியே வராதீர்!’ -எச்சரிக்கும் மருத்துவர்கள்

ஹேய்... ரீங்காரமே!

SCROLL FOR NEXT