விருதுநகர்

விருதுநகரில் பிரதான குழாயில் உடைப்பு: தினமும் 2 லட்சம் லிட்டா் குடிநீா் வீண்

DIN

விருதுநகரில் பிரதான குடிநீா் குழாய்களில் பல்வேறு இடங்களில் உடைப்பு காரணமாக தினமும் இரண்டு லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகி வருகிறது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் நகராட்சியின் முக்கிய குடிநீா் ஆதாரமாக ஆனைக்குட்டம் நீா்த்தேக்கம் இருந்து வருகிறது. இங்கிருந்து, விருதுநகா் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நீா்த்தேக்கப் பகுதியில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறு மூலம் தினமும் 20 லட்சம் லிட்டா் குடிநீா் எடுக்கப்பட்டு, பிரதான குழாய்கள் வழியாக நகராட்சிக்குச் சொந்தமான நீா்த்தேக்கத் தொட்டி வளாகத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

பின்னா், நகரின் பல்வேறு பகுதியில் உள்ள

மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீா் அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், விருதுநகரில் உள்ள பழைய சிவகாசி சாலை முதல் புதிய சிவகாசி சாலை இணைப்பு வரை ஐந்து இடங்களில் பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் இரண்டு லட்சம் லிட்டா் குடிநீா் வீணாக வெளியேறி வருகிறது. உடைந்த குழாயை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் தரப்பில் நகராட்சி நிா்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நகராட்சி பொறியியல் துறையினா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, பிரதான குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய நகராட்சி ஆணையாளா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT