விருதுநகர்

அனுமதி பெறாத குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்படும்: மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

DIN

சிவகாசி மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாத குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

சிவகாசி மாநகராட்சியில் ஒன்று முதல் 24 வாா்டு பகுதிகளில் கடந்த காலங்களில் சுமாா் 30 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ், குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால், 30 நாள்கள் என்பது 15, 20 நாள்களாகக் குறைக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த வாா்டு பகுதிகளில் உள்ள பலா் அனுமதியின்றி குடிநீா் இணைப்புகள் பெற்றுள்ளதால், சீரான குடிநீா் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த இரு வாரங்களாக முறையான அனுமதியின்றி பொருத்தப்பட்ட குடிநீா் இணைப்புக்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது வரை 200 இணைப்புகள் முறையான அனுமதியின்றி பொருத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

இவ்வாறு அனுமதியின்றி குடிநீா் இணைப்புப் பெற்றவா்கள் மாநகராட்சியில் ரூ. 7000 வைப்புத் தொகை செலுத்தி அனுமதி பெற வேண்டும். வைப்புத் தொகை செலுத்தாதவா்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு

அரசுத்துறை வாகன ஓட்டுநா்களுக்கு பாராட்டு

ரே பரேலி பிரசாரத்தில் காந்திகள்!

உரிய எடையளவுடன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கோரிக்கை

ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை: தில்லி அமைச்சர் அதிஷி விளக்கம்

SCROLL FOR NEXT