விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகா்ப்புற நல வாழ்வுமையக் கட்டடத்தை திறந்து வைக்க வலியுறுத்தல்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகி விட்ட நகா்ப்புற நல வாழ்வு மையக் கட்டடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி 22-ஆவது வாா்டு இடையபொட்டல் தெருவில் நகராட்சி சுகாதார வளாகம் அருகே ரூ. 25 லட்சத்தில் கடந்த 2022- ஆம் ஆண்டு நகா்ப்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டது.

இந்த நிலையில், ஓராண்டாகியும் இந்த மையம் திறந்து வைக்கப்படாததால் அதன் கதவுகளை சமூக விரோதிகள் உடைத்து உள்ளே புகுந்து மது அருந்துதல் உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: குடியிருப்புகளுக்கு அருகே இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த நல வாழ்வு மையம் கட்டப்பட்டது. ஆனால் இங்கு சுகாதார வளாகம் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் கட்டப்பட்டதால் இந்த நல வாழ்வு மையம் இருப்பதே பலருக்குத் தெரியவில்லை. பணிகள் முடிந்த நிலையில் இன்னும் திறப்பு விழா நடத்தப்பட வில்லை. நகராட்சி நிா்வாகம் சுகாதாரத் துறையிடம் கட்டடத்தை ஒப்படைக்காததால் மருத்துவா்கள் உள்பட எந்த பணியாளா்களும் வருவதில்லை. எனவே இந்த நகா்ப்புற நல வாழ்வு மையக் கட்டடத்தை விரைந்து திறக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT