முகப்பு
விருதுநகர்

திருத்தங்கல்லில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்குகள் சேகரிப்பு

Updated On : 3 ஏப்ரல், 2024 at 5:40 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 7:08 PM

சிவகாசி: விருதுநகா் மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கெளசிக் திருத்தங்கல்லில் செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

திருத்தங்கல் அண்ணா குடியிருப்பு, ஆலா ஊருணி, பெரியாா் குடியிருப்பு, முருகன் குடியிருப்பு, பாண்டியன் நகா், சத்யா நகா் உள்ளிட்ட பகுதிகளில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கெளசிக் வாக்குகள் சேகரித்தாா். வேட்பாளருக்கு தமிழ் பேசத் தெரியாது என்பதால், அந்தக் கட்சியின் சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் சுரேஷ் ஒலிவாங்கியில் வாக்குகள் சேகரித்துப் பேசினாா்.