விருதுநகர்

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Din

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் காளிதாஸ் மகன் காளீஸ்வரன் (26). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் தென்காசி தேசிய நெடுஞ்சாலை எல்.ஐ.சி. அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி சாலையில் விழுந்தாா்.

இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT