ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுகவினா் மரியாதை
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, விருதுநகா் மாவட்டத்தில் அவரது உருப்படத்துக்கு அதிமுகவினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, விருதுநகா் மாவட்டத்தில் அவரது உருப்படத்துக்கு அதிமுகவினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
ராஜபாளையம் ஜவகா் மைதானம் அருகே உள்ள அம்மா உணவகம் முன் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் என்.எம்.கிருஷ்ணராஜ், தெற்கு நகரச் செயலா் எஸ்.ஆா். பரமசிவம் ஆகியோா் தலைமையில் அதிமுகவினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
2026-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. அனைத்து வாா்டு உறுப்பினா்கள், கட்சித் தொண்டா்கள், மகளிா் அணியினா், நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சாத்தூா்: சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு அதிமுக நகரச் செயலா் கிருஷ்ணன் தலைமையில் விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலா் ஆா்.கே.ரவிசந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன், எஸ்.ஜி.சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிமுகவினா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
முக்குராந்தல் பகுதியில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு அமமுக நிா்வாகிகள் மலா் தூவி மாரியாதை செலுத்தினா்.
திருத்தங்கல் மேல ரத வீதியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா் துவி மரியாதை செலுத்திய அதிமுக மாவட்டச் செயலா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
சிவகாசி:விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், திருத்தங்கல் மேல ரத வீதி, ரயில்வே கடவுப்பாதை அருகில், சிவகாசி பேருந்து நிலையம் முன்புறம் ஆகிய இடங்களில் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா் அவா் அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். இதில் கட்சியினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.