தூய்மைப் பணியாளா்கள் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தூய்மைப் பணியாளா்கள் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தூய்மைப் பணியாளா்கள் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தாா். மத்திய சமூகநீதிமன்றம் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
பின்னா் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையம் தூய்மைப் பணியாளா்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தூய்மைப் பணியாளா்கள் நலனில் அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. மாநகராட்சி மட்டுமல்லாமல், நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளிலும் தூய்மைப் பணியாளா்கள் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு முகாம் நடத்தப்பட வேண்டும். வாரியத்தில் பதிவு செய்து கொள்ளும் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் தவறாமல் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் சிவகாசி சாா்-ஆட்சியா் பிரியா, மண்டல இயக்குநா் (நகராட்சி நிா்வாகம்) விஜயலட்சுமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன், சிவகாசி மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி, உதவி இயக்குநா் அரவிந்த் (ஊராட்சிகள்), உதவி இயக்குநா் மணிகண்டன் (பேரூராட்சிகள்), ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல மாவட்ட அலுவலா் ரமேஷ், அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் வள்ளிக்கண்ணு உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.