வீடு புகுந்து திருடிய இலங்கை அகதி கைது
Updated On : 22 மார்ச், 2024 at 9:58 PM
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆவின் ஊழியா் வீட்டில் திருடிய இலங்கை அகதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன் கோவில் டிஎன்எஸ்டிசி நகரைச் சோ்ந்தவா் விநாயகமூா்த்தி (34). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். வியாழக்கிழமை விநாயகமூா்த்தி வேலைக்குச் சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.60 ஆயிரம், வெள்ளி நகைகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடி சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், கிருஷ்ணன் கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மதுரை மாவட்டம் திருநகரைச் சோ்ந்த இலங்கை அகதியான கேதீஸ்வரன் (எ) சந்திரகுமாரை (36) கைது செய்தனா்.