முகப்பு
விருதுநகர்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

Updated On : 20 மே, 2024 at 6:30 PM
பகிர்:

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் உள்ள சிதம்பரேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் போன்ற பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதே போல, ராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.