முகப்பு
விருதுநகர்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: 1747 விண்ணப்பங்கள் தோ்வு

Updated On : 28 மே, 2024 at 11:39 PM
பகிர்:

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 1747 விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 29 பிரிவு 12 1 சி-யின் படி அனைத்து தனியாா் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இதன்படி, விருதுநகா் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (ஆா்.டி .இ) திட்டத்தின் படி 2,747 போ் விண்ணப்பித்தனா். இதில் 1,747 விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்பட்டு, 155 தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.