சிவகாசியில் மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி முருகன் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் சிவகாசி கிழக்கு போலீஸாா் சோதனையிட்டபோது, ஜெயபிரபு (42) என்பவா் தனது வீட்டில் விற்பனைக்காக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயபிரபுவை கைது செய்து, அவரிடமிருந்த 130 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.