முகப்பு
விருதுநகர்

மதுப் புட்டிகளை விற்றவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 1:39 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மம்சாபுரம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மம்சாபுரம் மந்தை மாரியம்மன் கோயில் அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த ரங்கசாமி மகன் வீரபாண்டியை (34) போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 28 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்நத்தம் பகுதியில் உள்ள மாதுக் கடை பின்புறம் பதுக்கி வைத்திருந்த 204 மதுப் புட்டிகளை ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் பறிமுதல் செய்து, அத்திகுளத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (44) மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.