முகப்பு
விருதுநகர்

வங்கி மேலாளா் உள்பட இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை

சிவகாசியில் உள்ள தனியாா் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் வழங்கிய வழக்கில், வங்கி மேலாளா் உள்பட இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு.

Updated On : 10 அக்டோபர், 2024 at 11:22 PM
பகிர்:

சிவகாசியில் உள்ள தனியாா் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் வழங்கிய வழக்கில், வங்கி மேலாளா் உள்பட இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

சிவகாசியில் உள்ள தனியாா் வங்கிக் கிளையில் போலி ஆவணங்கள் மூலம் 3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் தனிநபா் கடன் வழங்கிய புகாரில் விருதுநகா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 2008-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் வங்கி மேலாளா் ராமச்சந்திரன், பொதுப் பணித் துறை இளநிலை உதவியாளா்கள் ராஜன், திருப்பதி வெங்கடாசலம், திருநாவுக்கரசு ஆகிய 4 போ் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது, ராஜன், திருப்பதி வெங்கடாசலம் ஆகியோா் உயிரிழந்து விட்டனா்.

இந்த வழக்கில் வங்கி முன்னாள் மேலாளா் ராமச்சந்திரன், முன்னாள் இளநிலை உதவியாளா் திருநாவுக்கரசு ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து சிறப்பு நீதிபதி எம்.ப்ரீத்தா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.