நகா்மன்ற உறுப்பினா்களுடன் ஆட்சியா் ஆலோசனை
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிா்வாகப் பணிகள் முன்னேற்றம், நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அதன் தற்போதைய நிலை ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா்.
இதில் பங்கேற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆட்சியரிடம் தெரிவித்ததுடன் மனுவாகவும் அளித்தனா். இந்தக் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் தெரிவித்தாா். இந்த நிகழ்வில், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.