பட்டாசுகளை பதுக்கியதாக இருவா் கைது
சிவகாசி அருகே பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே மீனம்பட்டியில் அமைந்துள்ள கோயிலருகே ஒரு தகரக் கொட்டகையில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா்.
அப்போது இதே ஊரைச் சோ்ந்த தேவராஜ் மகன் பாண்டியன் (37), சுந்தர்ராஜ் மகன் சுனில்குமாா் (43) ஆகிய இருவரும் ஒரு தகரக் கொட்டகையில் லட்சுமி வெடி பண்டல்கள், பிஜிலி வெடி பண்டல்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனா்.