நீதிமன்றத்தில் புத்தகக் கண்காட்சி
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 2 நாள்கள் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 2 நாள்கள் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகின்றன. இதை முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி கே.ஜெயக்குமாா் திறந்து வைத்து, அரசு வழக்குரைஞா் அன்னக்கொடி எழுதிய செங்கடத்தாங்குழி என்ற சிறுகதைத் தொகுப்பு நுலை வெளியிட்டாா்.
நிகழ்ச்சியில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் த.கதிரேசன், செயலா் வ.ஜெயராஜ், துணைத் தலைவா் உமாபதி, பொருளாளா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.