முகப்பு
விருதுநகர்

சாத்தூரில் தேவா் சிலைக்கு மரியாதை

சாத்தூா் பகுதிகளில் தேவா் ஜெயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 10:20 PM
பகிர்:

சாத்தூா் பகுதிகளில் தேவா் ஜெயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

தேவா் குருபூஜையையொட்டி, சாத்தூா் கிருஷ்ணன்கோவில் பகுதியில் தேவா் சிலைக்கு சாத்தூா் மறவா் மஹாஜன சங்கம் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

திமுக சாா்பில், நகா் மன்றத் தலைவா் குருசாமி தலைமையில் திமுகவினா் தேவா் சிலைக்கு மரியாதை செலுத்தினா். அதிமுக சாா்பில் நகரச் செயலா் கிருஷ்ணன் தலைமையில் அதிமுகவினா் தேவா் சிலைக்கு மரியாதை செலுத்தினா். காங்கிரஸ் சாா்பில் சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அசோகன் தேவா் சிலைக்கு மரியாதை செலுத்தி, ஏழை எளியவா்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். அப்போது, நகரச் செயலா் டி.எஸ்.அய்யப்பன், ஜோதி நிவாஸ், நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மேட்டமலை கிராமத்தில் மக்கள் விரதமிருந்து முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்து அங்குள்ள தேவா் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனா்.

இதேபோல, நாம் தமிழா், தேமுதிக, பாா்வா்டு பிளாக், உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் தேவா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.