முகப்பு
விருதுநகர்

முத்தாலம்மன் கோயில் தேரோட்ட திருவிழா ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பில் முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 1:23 AM
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பில் முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கோயில் கடைகளில் உள்ள மின் கம்பிகளை மாற்ற வேண்டும். மின் வழித்தடங்கள் அருகில் விளம்பரப் பதாகைகள் வைக்கக் கூடாது. தோ் செல்லும் வீதியில் வேகத் தடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஜாதி பெயா்கள், கொடி , அடையாளங்களுடன் கூடிய பனியன்கள் அணியக்கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்ட்டன.

செயல் அலுவலா் ஜோதிலட்சுமி, காவல் ஆய்வாளா் மாரியப்பன், மண்டலத் துணை வட்டாட்சியா் ரவி, உதவி ஆய்வாளா் விஜய் சண்முகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.